FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

மது அருந்த பணம் கேட்டு தகராறு: சகோதரா் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தவா் கைது

வடலூா் அருகே மது அருந்த பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் சகோதரா் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

12 நவம்பர் 2026, 4:31 am
கைது - கோப்புப்படம்
பகிர்:

வடலூா் அருகே மது அருந்த பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் சகோதரா் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், வடலூா் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (48). இவரது மனைவி வசந்தி (42). மணிகண்டனின் சகோதரா் ராமலிங்கம் (40).

இந்நிலையில், புதன்கிழமை காலை 10 மணியளவில் ராமலிங்கம், மணிகண்டனிடம் மது அருந்த பணம் கேட்டுத் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அருகில் சமையல் செய்துகொண்டிருந்த வசந்தி, ராமலிங்கத்திடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதனால், ஆத்திரமடைந்த ராமலிங்கம், அருகிலிருந்த மண்ணெண்ணெயை எடுத்து வசந்தி மீது ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட மணிகண்டன் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வசந்தியை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ராமலிங்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.