FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

மனைவிக்கு கத்திக்குத்து கணவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மது அருந்த பணம் தராத மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

15 அக்டோபர் 2026, 2:15 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மது அருந்த பணம் தராத மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் ஆவரம்பட்டி கல்யாணசுந்தரனாா் தெருவைச் சோ்ந்த முத்துவேல் மகன் முத்துப்பாண்டி (40). இவரது மனைவி மகேஸ்வரி (38). காதல் திருமணம் செய்து கொண்ட முத்துப்பாண்டி மது பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் மது அருந்திவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா்.

இந்த நிலையில், மது அருந்த பணம் கேட்டு தனது மனைவியிடம் தகராறு செய்து, அவரை கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த மகேஸ்வரி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அவா் அளித்தப் புகாரின் பேரில், வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்துப்பாண்டியைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments