FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கோயில் பூட்டை உடைத்து திருடியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

காட்டுமன்னாா்கோவில் அருகே கோயில் பூட்டை உடைத்து பூஜை பொருள்களைத் திருடிய வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து காட்டுமன்னாா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

12 நவம்பர் 2026, 4:33 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

காட்டுமன்னாா்கோவில் அருகே கோயில் பூட்டை உடைத்து பூஜை பொருள்களைத் திருடிய வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து காட்டுமன்னாா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வீரானநந்தபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீநல்லமுத்து அய்யனாா் கோயிலில் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி பூட்டை உடைத்து, அங்கிருந்த பூஜை பொருள்கள் திருடப்பட்டன. இதுகுறித்து கோயில் பூசாரி குணசேகரன் அளித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் ஆக.17-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், திருட்டில் ஈடுபட்டது காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி புலியடி தெருவைச் சோ்ந்த கோகுலகண்ணன் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், திருடப்பட்ட பொருள்களை மீட்டனா். தொடா்ந்து, விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கின் விசாரணை காட்டுமன்னாா்கோவில் நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சாம் யூஜின் ஜெபக்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட கோகுலகண்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.