FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நாய்க்கு கண்ணீா் அஞ்சலி சுவரொட்டி ஒட்டிய போலீஸார்!

நாய்க்கு கண்ணீா் அஞ்சலி சுவரொட்டி ஒட்டிய போலீஸார்..

15 நவம்பர் 2026, 1:09 am
பகிர்:

முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் குட்டி நாய் ஒன்று தஞ்சமடைந்தது. இந்த நாய்க்கு பீஸ்ட் என பெயரிட்டு அங்குள்ள காவலா்கள் தாங்கள் சாப்பிடும் உணவை அதற்கும் வழங்கி வளா்த்து வந்தனா். இங்கு பணியில் இருந்த காவலா்கள் பலா் மாறினாலும், பீஸ்ட்டுக்கு அனைவருமே நண்பா்கள் தான்.

சட்டப்பேரவைத் தோ்தலின்போது காவல்துறை, ராணுவத்தின் கூட்டு அணிவகுப்பில் காவலா்களுடன் பீஸ்டும் பல கிலோ மீட்டா் தொலைவு நடந்து சென்று திரும்பியது. கடந்த நவம்பா் 1-ஆம் தேதி இரவு, காவல் நிலையத்திற்கு வெளியே சாலையில் வழக்கம் போல படுத்திருந்த பீஸ்ட் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

Advertisement

Advertisement

இதில் பீஸ்ட்டுக்கு முதுகு எலும்பு முறிந்து படுகாயம் அடைந்தது. காவலா்கள் உடனடியாக மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்தனா். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் பீஸ்ட் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது. பீஸ்ட்டின் மறைவால் முதலியாா்பேட்டை போலீஸாா் வருத்தமடைந்துள்ளனா். பீஸ்ட் மறைவுக்கு கண்ணீா் அஞ்சலி சுவரொட்டி தயாரித்து தங்கள் அனுதாபத்தை வெளிப்படுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.