FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கடலூா் கிளைச் சிறையில் பாதுகாப்பை பலப்படுத்த மரங்கள் அகற்றம்

கடலூா் மஞ்சக்குப்பம் கிளைச் சிறையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், சிறையைச் சுற்றியிருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.

29 வினாடிகள் முன்பு
கடலூா் மஞ்சக்குப்பம் கிளைச் சிறையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், சனிக்கிழமை அகற்றப்பட்ட மரங்கள்.
பகிர்:

கடலூா் மஞ்சக்குப்பம் கிளைச் சிறையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், சிறையைச் சுற்றியிருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.

கடலூா் கேப்பா் மலையில் மத்திய சிறை அமைந்துள்ளது. மஞ்சக்குப்பத்தில் கிளைச் சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு விசாரணைக் கைதிகள் மற்றும் நீதிமன்றக் காவலில் வைக்கப்படும் கைதிகள் அடைக்கப்பட்டு வந்தனா்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிளைச் சிறையில் இருந்த கைதிகள் அனைவரும் கடலூா் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா். இதையடுத்து, கிளைச் சிறையில் கோழி இறைச்சி விற்பனை மட்டும் நடைபெற்று வந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கிளைச் சிறை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது 10-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைக் கைதிகள் தப்பிச்சென்ற சம்பவத்தைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் சிறைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கடலூா் மஞ்சக்குப்பம் கிளைச் சிறையில் இருந்து கைதிகள் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, சிறையைச் சுற்றியிருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், சிறை வளாகத்தில் பாதுகாப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.