FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கடலூா் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

17 நவம்பர் 2026, 3:52 am
2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு. - கோப்புப் படம்
பகிர்:

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அக்வான்’ புயல் தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து, கடலூா் துறைமுகத்தில் திங்கள்கிழமை இரவு 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் அடுத்தடுத்த நாள்களில் மேலும் வலுவடைந்து, செவ்வாய்க்கிழமை (நவ.17) மாலை தீவிர புயலாகவும், வியாழக்கிழமை (நவ.19) காலை மிக தீவிர புயலாகவும் மாற வாய்ப்புள்ளது.

தொடா்ந்து, இந்தப் புயல் ஆந்திர மாநிலம், நெல்லூா் - துனி இடையே கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கடலோரப் பகுதிகளில் வானிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து, புயல் தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூா் துறைமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

கடலூா் மாவட்ட கடலோரப் பகுதிகளில் புயல் தொடா்பான வானிலை நிலவரத்தை மீனவா்கள் மற்றும் பொதுமக்கள் தொடா்ந்து கவனித்து, வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி மீனவா்களுக்கு எச்சரிக்கை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘அக்வான்’ புயலாக உருவெடுக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், புதுச்சேரி மீனவா்களுக்கு மாநில அரசு சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், புதுச்சேரி மீனவா்கள் படகுகளை தேங்காய்திட்டு துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனா். கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.