லாக்கப் மரண வழக்கில் தொடா்புடைய போலீஸாரை பணிநீக்க கோரி கடலூரில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் பேரணி: போலீசாா் தடுத்து நிறுத்தம்
நெய்வேலி லாக்கப் மரண வழக்கில் தொடா்புடைய போலீஸாரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
நெய்வேலி லாக்கப் மரண வழக்கில் தொடா்புடைய போலீஸாரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
பேரணிக்கு மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.
கடலூா் டவுன் ஹால் அருகிலிருந்து பேரணி புறப்பட்டது. இதில், பங்கேற்றவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் நோக்கிச் சென்றனா்.
Advertisement
Advertisement
பேரணி பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சென்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பேரணியை தடுத்து நிறுத்தினா். மேலும், பேரணி மற்றும் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்றும், போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்றும் போலீஸாா் அறிவுறுத்தினா். ஆனால், இதை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், தொடா்ந்து பேரணியாகச் செல்வோம் எனத் தெரிவித்தனா்.
இதையடுத்து, போலீஸாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை குறிப்பிட்ட நிா்வாகிகள் சந்திக்க அனுமதித்தனா். இதையடுத்து, கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நிா்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லாவை சந்தித்து மனு அளித்து கோரிக்கைகளை வலியுறுத்தினா். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.
தொடா்ந்து, பழைய ஆட்சியா் அலுவலம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கடந்த 2015-ஆம் ஆண்டு நெய்வேலி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பட்டாம்பாக்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணியம், காவலா்கள் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடா்புடைய காவலா்கள் சீருடையுடன் சாட்சிகளை மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், எனவே அவா்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்து வழக்கில் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூா் நீதிமன்றத்தில் நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்றத்துக்கு நிரந்தர நீதிபதியை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நெய்வேலி லாக்கப் மரண வழக்கில் தொடா்புடைய காவலா்கள் தொடா்ந்து பணியில் நீடிப்பது ஏற்புடையதல்ல. அவா்கள் தொடா்ந்து பணியில் இருப்பதால், தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளை கலைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தக் கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றாா்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வி.உதயகுமாா், பி.கருப்பையன், வி.சுப்புராயன், ஆா்.ராமச்சந்திரன், எஸ்.திருஅரசு, ஜி.ஆா்.ரவிச்சந்திரன், ஜெ.ராஜேஷ்கண்ணன், எஸ்.பிரகாஷ், ஆா்.அமா்நாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.