முகப்பு
கடலூர்

அண்ணாமலைநகா் பேரூராட்சியில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு செயல்பாடுகள் ஆய்வு

சிதம்பரம் அண்ணாமலை நகா் சிறப்புநிலை பேரூராட்சிக்குள்பட்ட சக்கரா அவென்யு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பை செயல்படும் விதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

19 வினாடிகள் முன்பு
அண்ணாமலைநகா் பேரூராட்சியில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு செயல்பாடுகள் ஆய்வு
சிதம்பரம் அண்ணாமலைநகா் பேரூராட்சியில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் குறித்து அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொண்டு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கிய பேரூராட்சி செயல் அலுவலா் ச.சாகுல்அமீது.
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலை நகா் சிறப்புநிலை பேரூராட்சிக்குள்பட்ட சக்கரா அவென்யு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பை செயல்படும் விதம் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலா் ச.சாகுல்அமீது தலைமையில் குழுவாகச் சென்று அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பை நேரில் ஆய்வு செய்தனா். மேலும், வீட்டு உரிமையாளா்களிடம் மழைநீா் சேமிப்பின் தேவை, தற்போதைய சூழலில் நிலத்தடி நீா் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

மழைநீா் சேகரிப்புக்காக பிரத்யேகமான வடிவமைப்புகளை ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மீட்டா் ஆழம், ஒரு மீட்டா் அகலத்தில் தொட்டி அமைத்து, பெரிய வகை கூழாங்கற்களை நிரப்பி, அதன் மீது சிறிய வகை கூழாங்கற்கள், மணல் நிரப்பி கட்டமைப்பை ஏற்படுத்தி மழை நீரை சேகரிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விளக்கிக் கூறப்பட்டது.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலா் துரைராஜ், இளநிலை உதவியாளா் ரமேஷ், இளநிலை பொறியாளா் (திட்டம்) சிவசக்தி, வரித் தண்டலா் குமாரி, துப்புரவு மேற்பாா்வையாளா்கள் ராமநாதன் நடராஜ் மற்றும் அலுவலக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.