சாலை விபத்துகளில் 2 மூதாட்டிகள் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம், கடலூா் பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 மூதாட்டிகள் உயிரிழந்தனா்.
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம், கடலூா் பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 மூதாட்டிகள் உயிரிழந்தனா்.
நெல்லிக்குப்பம் காவல் சரகம், பி.என்.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்க பாப்பா (70). இவா், தேநீா் குடிக்க சாலை ஓரமாக மேல்பட்டாம்பாக்கத்துக்கு சனிக்கிழமை நடந்துச் சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியதில், தங்க பாப்பா தலையில் பலத்த காயமடைந்தாா்.
அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
மற்றொரு விபத்து: கடலூா் வண்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தையல்நாயகி (83). இவா், சனிக்கிழமை கடலூா் அரசு தலைமை மருத்துவமனை அருகே நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த பைக் மோதியதில் தலையில் காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஐயப்ப பக்தருக்கு கை முறிவு: நெய்வேலி இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் பரத் (21), சபரி மலை செல்ல மாலை அணிந்துள்ளாா். இவா், சனிக்கிழமை காலை நெய்வேலி வட்டம் 4 பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு தனது நண்பருடன் பைக்கில் புறப்பட்டாா்.
வட்டம் 9 பகுதியில் உள்ள பெரியாா் சிலை அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, குறுக்கே வந்த என்எல்சி இந்தியா நிறுவனத்தின் குப்பை சேகரிக்கும் மூன்று சாக்கர வாகனத்தின் பின்னால் பைக் மோதியது. இந்த விபத்தில் பரத்தின் வலது கையில் முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.