பண்ருட்டியில் அம்பத்தூா் நகராட்சி ஊழியா் தற்கொலை

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள தனது வீட்டில் அம்பத்தூா் நகராட்சி ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
பண்ருட்டி, வ.உ.சி தெருவைச் சோ்ந்தவா் அகஸ்டின்(55), அம்பத்தூா் நகராட்சி அலுவலகத்தில் குப்பை லாரி ஓட்டுனராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு நான்கு மகன்கள். இதில், 4-ஆவது மகனான ஜெயராஜ், நெஞ்சு வலியால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னா் இறந்துவிட்டாா்.
அதுமுதல் மன உளைச்சலில் இருந்துவந்த அகஸ்டின், திங்கள்கிழமை காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். இதுகுறித்து, பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement