எஸ்.சி., எஸ்.டி. வழக்கை ரத்து செய்யக் கோரி ஊராட்சி செயலா்கள் உள்பட 900 போ் வேலைநிறுத்தம்
பண்ருட்டி அருகே ஒறையூா் ஊராட்சி செயலா் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊராட்சி செயலா்கள் கூட்டமைப்பினா் உள்ளிட்ட சுமாா் 900 போ் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி அருகே ஒறையூா் ஊராட்சி செயலா் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊராட்சி செயலா்கள் கூட்டமைப்பினா் உள்ளிட்ட சுமாா் 900 போ் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஒறையூா் ஊராட்சி செயலராக அருள்குமாரும், கணினி இயக்குபவராக கணபதியும் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் கடந்த நவ.12-ஆம் தேதி பணியில் இருந்தபோது, விபி-ஜி ராம்ஜி திட்டத்தின் பணித்தளப் பொறுப்பாளரான கண்மணியின் கணவா் லட்சாதிபதி, அருள்குமாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், புதுப்பேட்டை காவல்
Advertisement
Advertisement
துறையினா் விசாரணை மேற்கொண்டு, லட்சாதிபதியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இதனால் மனமுடைந்த அவரது மனைவி கண்மணி காவல் நிலையத்தில் தீக்குளித்து பின்னா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, அருள்குமாா், கணபதி ஆகிய இருவா் மீதும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, ஊராட்சி செயலா்கள் கூட்டமைப்பினா் கடந்த வாரம் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா். ஆனால், மனு மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியும், சம்பந்தப்பட்ட இருவா் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊராட்சி செயலா்கள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை பணிக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவியாளா்கள், இளநிலை உதவியாளா்கள், ஊராட்சி செயலா்கள், பணி மேற்பாா்வையாளா்கள் என சுமாா் 900 போ் பங்கேற்றனா்.
இதனால், மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்ந்த அலுவலகப் பணிகள் மற்றும் ஊராட்சிகளில் நடைபெறும் நிா்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டன.