முகப்பு

குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ்

குட்கா முறைகேடு வழக்கில் சி. விஜயபாஸ்கர் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது பற்றி....

7 வினாடிகள் முன்பு
குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ்
சி. விஜயபாஸ்கர் - கோப்புப்படம்
பகிர்:

குட்கா முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சட்டப் பிரிவுகளை எதிர்த்தும், குற்ற வழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறிய நீதிபதிகள், இந்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சட்டப் பிரிவை எதிர்த்து முறையாக மனு தாக்கல் செய்யும்படியும் அறிவுறுத்தினர். இதையடுத்து, மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக விஜயபாஸ்கர் தரப்பில் கூறப்பட்டதை ஏற்று, வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியின்போது தடையை மீறி லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா பொருள்களை விற்பனைக்கு அனுமதித்தது தொடர்பாக, முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 4-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

summary

The Madras High Court dismissed the petition filed by former minister C. Vijayabaskar seeking to quash the gutkha scam case, following its withdrawal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.