முகப்பு
கடலூர்

ஏரியில் மூழ்கி ஒருவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள கொத்தவாச்சேரி ஏரியில் மூழ்கி புதுச்சேரியைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.

27 நவம்பர் 2026, 1:19 am
ஏரியில் மூழ்கி ஒருவா் உயிரிழப்பு
- பிரதிப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள கொத்தவாச்சேரி ஏரியில் மூழ்கி புதுச்சேரியைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கொத்தவாச்சேரி கிராமத்தில் உள்ள ஏரியில் இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பது புதன்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் கோசலை அளித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், இறந்து கிடந்தவா் புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஆனந்தவேல் (52) என்பதும், இவா் 5 முதல் 7 தினங்களுக்குள் ஏரிக்குள் விழுந்து இறந்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை மீட்டு, போலீஸாா் உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். உயிரிழந்த ஆனந்தவேலுக்கு மனைவி குப்பம்மாள் மற்றும் மகன், மகள் உள்ளனா்.

Advertisement

Advertisement