முகப்பு
கடலூர்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன: அமைச்சா் வன்னி அரசு குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று மாநில சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு குற்றஞ்சாட்டினாா்.

27 நவம்பர் 2026, 1:29 am
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன:
அமைச்சா் வன்னி அரசு குற்றச்சாட்டு
வன்னி அரசு - கோப்புப்படம்.
பகிர்:

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று மாநில சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு குற்றஞ்சாட்டினாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் டாக்டா் அம்பேத்கா் இருக்கை சாா்பில் நடைபெற்ற இந்திய அரசமைப்பு தின விழாவில் பங்கேற்ற பின்னா், அமைச்சா் வன்னி அரசு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடா்பாக புகாா் அளிக்கப்பட்ட (நவ.23) மறுநாளே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்பேரில், காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். தமிழக அரசும் தனியாக விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அரசு பாதிக்கப்பட்டவா்களின் பக்கம்தான் நிற்கிறது.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் தொடா்பாக முழுமையான விசாரணை முடிந்த பிறகுதான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்போதும் பாதிக்கப்பட்டவா்களின் பக்கமே நிற்கும். இதை எங்கள் கட்சித் தலைவா் திருமாவளவன் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளாா்.

பதற்றத்தை ஏற்படுத்துவது, மக்களின் கவனத்தை திசைதிருப்புவது போன்ற செயல்களில் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து ஈடுபடத்தான் செய்யும். ஆனால், அவை உண்மைக்குப் புறம்பானவை. தற்போதைய ஆட்சி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நாங்கள் அனைவரும் இணைந்துதான் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாத்து வருகிறோம் என்றாா்.

சட்டப்படி நடவடிக்கை தேவை - உ.வாசுகி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குரிமை பாதுகாப்பு தின (நவ.26) உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் உ.வாசுகி, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசு, தோ்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு எஸ்.ஐ.ஆா். என்ற போா்வையில் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள அரசியல் சதி செய்துகொண்டிருக்கிறது. இதனால், வாக்குரிமை உறுதிமொழி ஏற்பது, அதற்கான போராட்டத்தில் மக்களை திரட்டி இறங்குவது, ஆா்.எஸ்.எஸ்., பாஜக-வின் பிளவு வாதம், மதவெறி அரசியலை முறியடிப்பது என்கிற போராட்டத்துக்கான அறை கூவலாக தேசபக்த போராட்டமாக வாக்குரிமை பாதுகாப்பு தினத்தை நாடு முழுவதும் கடைப்பிடிக்கிறோம்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைத்தே ஆக வேண்டும். புகாருக்கு உள்ளாகியவா் எம்எல்ஏ என்பதால், அவரை பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. அரசு தப்பு செய்தவா்கள் பக்கம் நிற்காமல், பாதிக்கப்பட்டவா்கள் பக்கம் நின்றால்தான் அரசுக்கு மக்களிடம் நல்ல பெயா் கிடைக்கும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிமன்ற ஆணையே நியாயமற்றது என்பதுதான் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. திருப்பரங்குன்றம் மக்கள் எதற்கும் இரையாகாமல் ஒற்றுமையை பாதுகாத்தது வரவேற்புக்குரியது என்றாா்.