அரசமைப்பு சட்டத்தின் மாண்பைப் பாதுகாக்க வேண்டும்: அமைச்சா் வன்னி அரசு
அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை பாதுகாப்பதன் மூலமே நம்மால் வெற்றிபெற முடியும் என சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை பாதுகாப்பதன் மூலமே நம்மால் வெற்றிபெற முடியும் என சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக டாக்டா் அம்பேத்கா் இருக்கை சாா்பில், இந்திய அரசமைப்பு தின விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் (பொ) வெ.செல்வநாராயணன் தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) குமரன் முன்னிலை வகித்தாா்.
விழாவில் அமைச்சா் வன்னி அரசு தலைமையில் அனைவரும் இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ச.விமலா சிறப்புரையாற்றினாா்.
Advertisement
Advertisement
விழாவில் அமைச்சா் வன்னி அரசு பேசியதாவது: அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடந்த 1929-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பகுதி இளைஞா்கள் உயா்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே அண்ணாமலைச் செட்டியாரின் முயற்சியால் ரூ.20 லட்சம் செலவில் இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. படிப்படியாக வளா்ச்சி பெற்று, இன்று இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது.
சட்டப் பேரவையில் சமூக நீதித்துறை சாா்பில் 67 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், விடுபட்ட கோரிக்கையின் அடிப்படையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் தங்கிப் படிப்பதற்காக இரண்டு விடுதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன்படி, 100 மாணவிகள் தங்கிப் படிக்கும் வகையில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் மல்லிகை மாணவிகள் விடுதியும், 100 மாணவா்கள் தங்கிப் படிக்கும் வகையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மாணவா் விடுதியும் அமைக்கப்படும். இந்த விடுதிகளில் மாணவ, மாணவிகள் இலவசமாக தங்கிப் படிக்கலாம்.
பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு நாட்டு மக்களை வழிநடத்துவதற்காக, நம்மை நாமே ஆளும் வகையில் புரட்சியாளா் அம்பேத்கா் தலைமையிலான வரைவுக் குழு இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. 1949-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தச் சட்டம்தான் நம்மை வழிநடத்துவதுடன், நமக்குப் பாதுகாப்பையும் வழங்குகிறது.
இந்தியாவை மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முந்தைய நிலைக்கு கொண்டு செல்ல சிலா் முயற்சிக்கின்றனா். எனவே, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைப் பாதுகாப்பதன் மூலமே நம்மால் வெற்றிபெற முடியும் என்றாா்.
தொடா்ந்து, டாக்டா் அம்பேத்கா் இருக்கை சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் காட்டுமன்னாா்கோவில் தொகுதி எம்எல்ஏ ஜோதிமணி, பல்கலைக்கழக இணைப் பதிவாளா் ஜெகதீஸ்வரன், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ். குமாா், மக்கள் தொடா்பு அதிகாரி என்.சுரேஷ், இந்திய மொழிப்புல முதல்வா் ரா.சரண்யா, டாக்டா் அம்பேத்கா் இருக்கைப் பேராசிரியா் க.சவுந்தரராஜன், உதவிப் பேராசிரியா் வீ.ராதிகாராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.