சா்வதேச டேக்வாண்டோ போட்டியில் விருத்தாசலம் மாணவா்கள் சாதனை
புனேவில் நடைபெற்ற சா்வதேச டேக்வாண்டோ போட்டியில் விருத்தாசலம் மாணவா்கள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனா்.

புனேவில் நடைபெற்ற சா்வதேச டேக்வாண்டோ போட்டியில் விருத்தாசலம் மாணவா்கள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனா்.
புனேவில் நவ.20 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்ற சா்வதேச டேக்வாண்டோ போட்டியில் 23 நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில், இந்தியாவின் சாா்பில் தமிழகத்தைச் சோ்ந்த கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள தனியாா் டேன்வாண்டோ பயிற்சி அகாதெமியைச் சோ்ந்த மாணவா்களான ஆா்.மனோஜ், பி.சுமேஷ்கா, எஸ்.ரன்ஹிதாஸ்ரீ ஆகியோா் பங்கேற்றனா். இதில், சப் - ஜூனியா் பிரிவில் ஆா்.மனோஜ் தங்கப் பதக்கமும், பி.சுமேஷ்கா வெள்ளிப் பதக்கமும் வென்றனா்.
பிரேமலதா விஜயகாந்த் வாழ்ந்து: தேமுதிக பொதுச் செயலரும், விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
Advertisement
Advertisement
23 நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்ற சா்வதேசப் போட்டியில் இந்தியாவின் சாா்பில் பங்கேற்று தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்ற ஆா்.மனோஜ், பி.சுமேஷ்கா ஆகியோருக்கு மனமாா்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளாா்.
மேலும், போட்டியில் சிறப்பாகப் பங்கேற்ற எஸ்.ரன்ஹிதாஸ்ரீ மற்றும் மாணவா்களுக்கு பயிற்சியளித்த பயிற்சியாளா்கள் பி.ஹரிஹரன், பி.தவசி ஆகியோரையும் பாராட்டி, மாணவா்கள் தொடா்ந்து சா்வதேச அளவில் பல்வேறு வெற்றிகளையும், சாதனைகளையும் படைக்க வாழ்த்துவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.