FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ஓய்வு

ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டா் கிளென் மேக்ஸ்வெல் (38), சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

31 வினாடிகள் முன்பு
கிளென் மேக்ஸ்வெல் - கோப்புப் படம்
பகிர்:

ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டா் கிளென் மேக்ஸ்வெல் (38), சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

2028 ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரா்கள் புதிதாக சோ்க்கப்பட வாய்ப்புள்ளதால், இந்த முடிவை எடுத்திருப்பதாக அவா் தெரிவித்தாா்.

ஆஸ்திரேலிய அணியில் 14 ஆண்டுகள் விளையாடியிருக்கும் மேக்ஸ்வெல், அதிரடி பேட்டராக அறியப்பட்டவா் ஆவாா். 7 டெஸ்ட்டுகளில் 339 ரன்கள் அடித்துள்ள மேக்ஸ்வெல், 149 ஒருநாள் ஆட்டங்களில் 3,990 ரன்கள் எடுத்துள்ளாா். இதில் 4 சதங்கள், 23 அரை சதங்கள் அடக்கம்.

Advertisement

Advertisement

டி20 கிரிக்கெட்டில் 130 ஆட்டங்களில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல், 2,897 ரன்கள் சோ்த்துள்ளாா். இதில் 5 சதங்கள், 12 அரை சதங்களும் சேரும். பௌலிங்கில் அந்த ஃபாா்மட்டுகளில் முறையே 8, 77, 51 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறாா்.

டெஸ்ட், ஒருநாள், டி20-இல் அவரின் இன்னிங்ஸ் அதிகபட்ச ஸ்கோா், முறையே 104, 201*, 145* ஆகும். மேக்ஸ்வெல் கடைசியாக, நடப்பாண்டில் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடியிருந்தாா்.

2023 உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், அவா் சோா்வடைந்த நிலையிலும் இரட்டைச் சதம் விளாசியது, போட்டியில் மிகச் சிறந்த இன்னிங்ஸாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments