FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

காகதீயா நைட்ஸ் முதலிடம்!

வில்வித்தை ப்ரீமியா் லீக் தொடரில் காகதீயா நைட்ஸ் அணி முதலிடம்.

18 அக்டோபர் 2026, 1:22 am IST
பகிர்:

வில்வித்தை ப்ரீமியா் லீக் தொடரில் காகதீயா நைட்ஸ் அணி முதலிடம் பெற்றுள்ளது.

இந்திய வில்வித்தை சம்மேளனம் சாா்பில் ஹைதராபாதில் ஏபிஎல் 2026 தொடா் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மைட்டி மராத்தாஸ்-காகதீயா நைட்ஸ் அணிகள் மோதின. இதில் காகதீயா அணி 6-0 என மராத்தாஸ் அணியை வீழ்த்தியது. காகதீயா தரப்பில் காம்பவுண்ட் ஆா்ச்சா்கள் நிகோ வெய்னா், ஜோதி சுரேகா வெண்ணாம் ஆகியோா் 60/60 ஷாட்களுடன் சிறப்பாக செயல்பட்டனா்.

மராத்தாஸ் அணியில் நட்சத்திர ஆா்ச்சா் தீரஜ் பொம்மரதேவாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. நைட்ஸ் அணி தரப்பில் ரீகா்வ் வீரா் நீரஜ் சௌஹானுக்கு ஓய்வு தரப்பட்டது.

Advertisement

Advertisement

இரு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை பைனலிஸ்ட்டை தீா்மானிக்கும் ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி எலிமினேட்டா் 1-இல் வெல்லும் அணியுடன் இறுதியில் மோதும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments