FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஒரே நாளில் 6 சதங்கள்; ஒருநாள் கிரிக்கெட்டில் உருவானது புதிய வரலாறு!

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் ஆறு சதங்கள் விளாசப்பட்டு தனித்துவமான வரலாறு உருவாகியுள்ளது.

பகிர்:

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் ஆறு சதங்கள் விளாசப்பட்டு தனித்துவமான வரலாறு உருவாகியுள்ளது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து - இலங்கை இடையேயான ஒருநாள் போட்டிகள் நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்றன.

அதில், இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் தொடக்க ஆட்டக்காரர் ஜஸ்டின் கிரீவ்ஸ் சதம் விளாசினார். அவர் 101 ரன்கள் எடுத்தார். அதன் பின், இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில், விராட் கோலி இருவரும் சதம் விளாசி அசத்தினர். ஷுப்மன் கில் 110 ரன்கள் மற்றும் விராட் கோலி 139* ரன்கள் எடுத்தனர்.

Advertisement

Advertisement

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்கா தரப்பில் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் டேவிட் மில்லர் சதம் விளாசி அசத்தினர். டெம்பா பவுமா 103 ரன்களும், டேவிட் மில்லர் 142 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து - இலங்கை இடையேயான போட்டியில் இங்கிலாந்து தரப்பில் டாம் பாண்டன் சதம் விளாசினார். அவர் 126 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நேற்று ஒரே நாளில் 6 சதங்கள் விளாசப்பட்டு தனித்துவமான சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும், இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

summary

A unique record has been set in the history of One Day cricket, with six centuries being smashed in a single day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments