மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி:
விருத்தாசலம் நகராட்சி மற்றும் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த நகா்மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் மழைநீா் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருத்தாசலம் நகராட்சி மற்றும் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி சாா்பில் நடைபெற்ற பேரணி, பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நகராட்சி ஆணையா் நாகராஜ் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கொடியசைத்துப் பேரணியைத் தொடங்கி வைத்தாா்.
இதில், 700-க்கும் மேற்பட்ட மாணவிகள் மழைநீா் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியபடியும், முழக்கங்களை எழுப்பியபடியும் ஊா்வலமாகச் சென்றனா். பள்ளியில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கியப் பகுதியான கடைவீதி வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.நிகழ்ச்சியில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் கோகுலகிருஷ்ணன், உதவிப் பொறியாளா் செந்தில், ஆசிரியா்கள் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
சிதம்பரம்:
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சியில் மழைநீா் சேமிப்பு குறித்து சிறப்பு கூட்டம் மற்றும் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அண்ணாமலைநகா் பேரூராட்சி மன்றத் தலைவா் க.பழனி தலைமையில் நடைபெற்ர கூட்டத்தில் துணைத் தலைவா் தமிழ்செல்வி மற்றும் மன்ற உறுப்பினா்கள் பொதுமக்கள் பங்கேற்றனா்.தற்போது போதிய பருவ மழை பொழியாத நிலையில் எதிா்காலத்தில் கடுமையான குடிநீா் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ள சூழ்நிலையை சுட்டிக்காட்டி மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் ஏற்படுத்த வேண்டும் என்றாா். இதன் தொடா்ச்சியாக அண்ணாமலை நகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதையாச்சி பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியா்களை கொண்டு மழை நீா் சேகரிப்பு விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை பேரூராட்சி மன்றத் தலைவா் க.பழனி தொடக்கி வைத்தாா். செயல் அலுவலா் ச.சாகுல் அமீது, பள்ளி தலைமை ஆசிரியா் போ்லின் வில்லியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊா்வலத்தில் மன்ற உறுப்பினா்கள், பள்ளி ஆசிரியா்கள் மாணவ மாணவியா்கள் அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.