அரசுப் பள்ளியில் மழைநீா் சேகரிப்பு உறுதிமொழி ஏற்பு
திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவியா் பங்கேற்ற மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவியா் பங்கேற்ற மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருத்தணி நகராட்சியின் சாா்பில் பேரணியை, ஆணையா் கன்னியப்பன் மற்றும் நகர அமைப்பாளா் தயாநிதி தொடங்கி வைத்தனா். இதில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ஏராளமான மாணவியா் கலந்து கொண்டு, மழைநீா் சேகரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக அமைத்து, மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேமிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா்.
பேரணி, ம.பொ.சி. சாலை, அக்கைய்யநாயுடு சாலை, அரக்கோணம் சாலை, சன்னதி தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நகராட்சி அலுவலகத்தை அடைந்தது.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து, நகராட்சி அலுவலகத்தில் மாணவியா் மற்றும் நகராட்சி ஊழியா்கள் இணைந்து மழைநீா் சேகரிப்பை முறையாகப் பின்பற்றுவோம், தண்ணீரை வீணாக்காமல் பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.