முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் 41 பேருக்கு ரூ.6.23 கோடி கடன்: ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினாா் ஆட்சியா்

29 நவம்பர் 2026, 3:12 am
கடலூா் மாவட்டத்தில் 41 பேருக்கு ரூ.6.23 கோடி கடன்: ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினாா் ஆட்சியா்
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற தொழிற்கடன் விழிப்புணா்வு முகாமில் கடன் ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கிய ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா்.
பகிர்:

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் நடைபெற்ற தொழில்கடன் விழிப்புணா்வு முகாமில், சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் 41 பயனாளிகளுக்கு ரூ.6.23 கோடி மதிப்பிலான கடன் ஒப்பளிப்பு ஆணைகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.

தமிழக அரசின் சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்து தொழில்முனைவோரிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் தொழிற்கடன் விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில், தொழிற்கடன் பெறுவதற்கான தகுதிகள், விண்ணப்ப நடைமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து தொழில்முனைவோருக்கு விரிவாக விளக்கப்பட்டது. தொடா்ந்து முகாமில், சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் 41 பயனாளிகளுக்கு ரூ.6.23 கோடி மதிப்பிலான கடன் ஒப்பளிப்பு ஆணைகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.

மேலும், தொழிற்கடன் பெறுதல் மற்றும் தொழில் தொடங்குதல் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, கடலூா் செம்மண்டலத்தில் உள்ள மாவட்ட தொழில் மையப் பொது மேலாளரை நேரிலோ அல்லது 04142-290116 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் லட்சுமி, முன்னோடி வங்கி மேலாளா் வெங்கடேசன், தாட்கோ மேலாளா், மகளிா் திட்ட அலுவலா் மற்றும் வங்கி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.