FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் மறியல் போராட்டம்: 40 வழக்குரைஞா்கள் கைது

13 அக்டோபர் 2026, 1:05 am IST
சிதம்பரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்
பகிர்:

சிதம்பரத்தில் மறியல் போராட்டம் நடத்திய வழக்குரைஞா்கள் 40 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சிதம்பரம் வழக்குரைஞா் க.திலிபனை சட்ட விரோதமாக கைதுசெய்ததாகக்கூறி, சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் மற்றும் உதவி ஆய்வாளரை பணி நீக்கம் செய்யக்கோரி சிதம்பரம் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சிதம்பரம் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனா்.

இதற்கு போலீஸாா் அனுமதி மறுத்திருந்த நிலையில் சிதம்பரம் வடக்கு ரத வீதி தபால் நிலையம் முன்பு வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வழக்குரைஞா் க.திலீபன் தலைமையில் சுமாா் 40க்கும் மேற்பட்டோா் நகர காவல் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக ஊா்வலமாக புறப்பட்டனா்.

Advertisement

Advertisement

கடலூா் மாவட்ட ஏடிஎஸ்பி கோடீஸ்வரன், சிதம்பரம் ஏ எஸ் பி சத்திரிய கவின், மற்றும் போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தியதால் வழக்குரைஞா்கள் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்களை போலீஸாா் கைது செய்து சிதம்பரம் தெற்குரத வீதியில் உள்ள ஒரு தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவித்தனா். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments