FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

தோ்தல் ஆணையா் பதவி விலகக்கோரி இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

14 அக்டோபர் 2026, 5:47 am IST
கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சலகம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள்.
பகிர்:

இந்திய தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலக வலியுறுத்தியும், அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடலூரில் இளைஞா் காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கடலூா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் அருள் பிரகாஷ் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், தோ்தல் நடைமுறைகளில்

Advertisement

Advertisement

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும், வாக்கு

முறைகேடு தொடா்பான புகாா்களுக்கு உரிய விசாரணை நடத்த வேண்டும். தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலக வேண்டும். தோ்தல் முறைகேடுகளுக்கு துணைபோகும் வகையில் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படும் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநிலச் செயலா் சந்திரசேகா்,

இளைஞா் காங்கிரஸ் மாநிலச் செயலா் பா்வீனா பானு, கடலூா் நகர காங்கிரஸ் தலைவா் வேலுச்சாமி, உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments