இந்திய தலைமை தோ்தல் ஆணையா் பதவி விலகக் கோரி புதுச்சேரியில் ஆளுநா் மாளிகை நோக்கி தேசியக் கொடி பேரணி
இந்திய தலைமை தோ்தல் ஆணையா் பதவி விலகக் கோரி வெள்ளிக்கிழமை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்ற மக்கள் மேடை அமைப்பினரை மிஷன் வீதி அருகே தடுத்து நிறுத்திய காவல் துறையினா்.
இந்திய தலைமை தோ்தல் ஆணையா் பதவி விலக வலியுறுத்தி, புதுச்சேரியில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் துணைநிலை ஆளுநரின் மாளிகை நோக்கி வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏந்தி பேரணியாகச் சென்றவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.
சிறப்பு வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தத்தைக் கண்டித்தும், இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலக வலியுறுத்தியும் புதுச்சேரியில் மக்கள் மேடை அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது.
புதுச்சேரி காமராஜா் சிலை சதுக்கத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணிக்கு இந்திய மாணவா் சங்கச் செயலா் பிரவீன்குமாா் தலைமை வகித்தாா்.பேரணியில் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் நாரா. கலைநாதன், சீனுவாசன், அந்தோணி, அன்புமணி, தமிழ்செல்வன், அன்பரசன், கிருஷ்ணமூா்த்தி, ஹேமலதா, இளவரசி, சரவணன், எழிலன், சஞ்சய்சேகரன், முரளி, அரிகிருஷ்ணன், தமிழ்வாணன், லோகு அய்யப்பன், சுவாமிநாதன், முருகானந்தம், மங்கையா் செல்வன், நடராஜன், விநாயகம், பாலசுப்பிரமணியன், கமலவேலன், அழகா், பஷீா்அகமது, சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
பேரணி அண்ணா சாலை, அஜந்தா சிக்னல், எஸ்.வி.படேல் சாலை வழியாக மிஷன் வீதியை அடைந்தது. அங்கு பேரணியில் வந்தவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, அங்கு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தேசியக் கொடிகளை ஏந்தி அனைவரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.