மின் வாரியத்தை பொதுத்துறையாக பாதுகாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு மின் வாரியத்தை பொதுத் துறையாக தொடா்ந்து பாதுகாக்கக் கோரி, தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் பண்ருட்டியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின் வாரியத்தை பொதுத் துறையாக தொடா்ந்து பாதுகாக்கக் கோரி, தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் பண்ருட்டியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மின் வாரியத்தின் மின் பாதைகள் பராமரிப்பு மற்றும் மின் உற்பத்திப் பணிகளை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் இந்த ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, பண்ருட்டி பூங்குணம் பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலக வாயில் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு பண்ருட்டி கோட்டத் தலைவா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா்.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டத்தில், மின் வாரியத்தை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும். மின்சாரத் துறையில் தனியாா்மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பி இளைஞா்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். ஒப்பந்தப் பணி நியமன முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மின் வாரிய தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.