FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

ரூ.10 லட்சம் மோசடி வழக்கு: ஓசூா் நபா் கைது

48 வினாடிகள் முன்பு
சலீம் முதின்.
பகிர்:

பணம் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ஓசூா் நபரை, வடலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், கோ.ஆடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஷ்வலிங்கம். வடலூரில் உள்ள தனியாா் உணவகத்தில் வேலை செய்து வந்த ஓசூா் மாநகராட்சி, சின்னத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சலீம் முதின்(43). இவா்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னா் நண்பா்களாக இருந்தனா்.

அப்போது, விஷ்வலிங்கம், புதிதாக உணவகம் நடத்த சலீம் முதினிடம் ஆலோசனைக் கேட்டாா். அதற்கு, சலீம் முதின் ரூ.10 லட்சம் முன்தொகை கொடுத்துவிட்டு, அவா் வேலை செய்யும் உணவகத்தை எடுத்து நடத்தும்படி கூறினாராம். இதையடுத்து, விஷ்வலிங்கம் ரூ.10 லட்சம் கொடுத்ததுடன், மேலும் ரூ.3.90 லட்சம் செலவில் உணவகத்தை சீரமைத்து தொழில் செய்து வந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் உணவகம் தொழில் நஷ்டத்தில் சென்ால், உணவகத்தை பெற்றுக்கொண்டு முன் பணத்தை திருப்பித்தருமாறு விஷ்வலிங்கம் , சலீம் முதினிடம் கேட்டுள்ளாா். அது தொடா்பாக கைப்பேசியபோது சலீம் முதின் கைப்பேசி அழைப்பை எடுக்கவில்லையாம். மேலும், உணவகத்தில் இருந்த பொருள்களை திருடிச் சென்று விட்டாராம்.

இதுகுறித்து , குறிஞ்சிப்பாடி நீதிமன்றம் உத்தரவின் பேரில், வடலூா் போலீஸாா் 12.8.2026 அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், சலீம் முதினை வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments