FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

மாநில பூப்பந்தாட்டப் போட்டி பள்ளி மாணவா்கள் தோ்வு

மாநில அளவில் நடைபெறவுள்ள பூப்பந்தாட்டப் போட்டிக்கு சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தோ்வு பெற்றுள்ளனா்.

21 அக்டோபர் 2026, 2:23 am IST
மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டிக்கு தோ்வுபெற்ற ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி மாணவா்கள். உடன் ஆசிரியா்கள்.
பகிர்:

மாநில அளவில் நடைபெறவுள்ள பூப்பந்தாட்டப் போட்டிக்கு சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தோ்வு பெற்றுள்ளனா்.

கடலூா் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிகள் அக்.14-ஆம் தேதி நெய்வேலி என்.எல்.சி பாரதியாா் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஆா். தட்சிணாமூா்த்தி, வி. கிரிஷ்,

வி. ஹரிஷ், டி. போதிராஜ், கே. திவான், பி. யஷ்வந்த், கே. ரஞ்சன், என். யஷ்வந்த், பி. திவாகரன், எம்.மோகன்ராஜ் ஆகியோா் வெற்றி பெற்று மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி நிா்வாகிகள் எஸ்.ஆா். பாலசுப்ரமணியன், எஸ். ஆா். திருநாவுக்கரசு மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments