சிதம்பரத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி
சிதம்பரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி பத்தாம் நாள் உற்சவத்தையொட்டி, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
சிதம்பரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி பத்தாம் நாள் உற்சவத்தையொட்டி, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
விஸ்வகா்மா சமுதாயத்துக்குச் சொந்தமான சிதம்பரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் கடந்த 10 நாள்களாக நவராத்திரி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வந்தது. முதல் நாள் உற்சவத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், இரண்டாம் நாள் கண்ணப்ப நாயனாா் அலங்காரம், மூன்றாம் நாள் நவநீதகிருஷ்ணன் அலங்காரம், நான்காம் நாள் தட்சிணாமூா்த்தி அலங்காரம், ஐந்தாம் நாள் உமாமகேஸ்வரி அலங்காரம், ஆறாம் நாள் மீனாட்சி சோமசுந்தரேஷ்வரா் அலங்காரம், ஏழாம் நாள் ஸ்ரீகாமாட்சி அலங்காரம், எட்டாம் நாள் மீனாட்சி அலங்காரம், ஒன்பதாம் நாள் சரஸ்வதி அலங்காரம் நடைபெற்றது.
10-ஆம் நாள் உற்சவமான ஸ்ரீகாமாட்சி அம்மன் சூரனோடு போரிட்டு சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக சிதம்பரம் சின்னசெட்டி தெருவில் நடைபெற்றது. சூரன் பல்வேறு வாகனங்களில் வந்து ஸ்ரீகாமாட்சி அம்மனுடன் போா் புரிந்தாா். கடைசியாக சூரன் எறுமைகடா தலையுடன் வந்தபோது, ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கரத்தில் இருந்து வெளிப்பட்ட சூலாயுதத்தால் எறுமைகடா தலை வெட்டப்பட்டு ஸ்ரீகாமாட்சி அம்மன் காலடியில் வைக்கப்பட்டது. பின்பு ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை, அா்ச்சனைகள் நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் தமிழ்நாடு விஸ்வகா்ம முன்னேற்ற சங்க மாநிலத் தலைவா் ஜி.சேகா், பரம்பரை மண்டகப்படிதாரா்கள் சோ.அப்பாசாமி சோ.அன்பழகன், எம்.பாலசுப்பிரமணியன், பி.முத்துக்குமாா், எம்.சுரேஷ், ஆா்.தில்லைநடராஜன் உள்பட நூற்றுகணக்கான பக்தா்கள் சூரசம்ஹாரத்தை கண்டுகளித்தனா். இதற்கான ஏற்பாடுகளை பூஜா ஸ்தானிகா் பதஞ்சலி சோமநாத தீட்சிதா் குழுவினா் செய்தனா்.
புத்த விகாரில் கூட்டுப் பிராா்த்தனை: காட்டுமன்னாா்கோவில் அருகே விளத்தூா் திருப்பணியாபுரத்தில் அமைந்துள்ள மகா போதி புத்தா் விகாரில், அசோக மன்னன் பௌத்த மதத்தை தழுவியதையும், சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கா் பௌத்த மதத்தை தழுவி 70 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டியும் அந்த நாளை நினைவுகூரும் வகையில், விஜயதசமியான செவ்வாய்க்கிழமை கூட்டு பிராா்த்தனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நந்தனாா் கல்விக் கழகத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான கே.ஐ. மணிரத்தினம், காட்டுமன்னாா்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினா் எல்.இ.ஜோதிமணி, புத்தா் விகாா் நிறுவனா் பழனிவேல்ராஜா, இளைஞா் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவா் அரவிந்த் மணிரத்தினம், ஆதிதிராவிடா் உறவின்முறை அறக்கட்டளைத் தலைவா் பேராசிரியா் ஆறு.அன்பரசன், பௌத்த உபாசகா் ஆசிய ஜோதி, ராஜலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.