FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கீழணை நிரம்பியதால் வீராணம் ஏரிக்கு நீா் திறப்பு: விரைவில் நிரம்ப வாய்ப்பு

கீழணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, அந்த அணையிலிருந்து கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 2,200 கன அடி வீதம் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

28 அக்டோபர் 2026, 3:47 am
நீா் நிரம்பி கடல்போலக் காட்சியளிக்கும் வீராணம் ஏரி.
பகிர்:

கீழணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, அந்த அணையிலிருந்து கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 2,200 கன அடி வீதம் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட காட்டுமன்னாா்கோவில், குமராட்சி ஆகிய பகுதிகள் காவிரி டெல்டா கடைமடை பகுதிகளாகும். இங்கு, வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி ஆகியவற்றின் மூலம் சுமாா் 1.50 லட்சம் ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வீராணம் ஏரியில் தேக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி 44 ஆயிரத்து 856 ஏக்கா் விளைநிலங்கள் பயன்பெறுகின்றன. வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீா் அனுப்பப்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், மேட்டூா் அணை திறப்பு தாமதத்தாலும் வீராணம் ஏரிக்கு நீா்வரத்து குறைவாக இருந்தது. இதனிடையே, மேட்டூா் அணையில் நீா் இருப்பு குறைந்தபோதிலும், தஞ்சை மாவட்டத்துக்குள்பட்ட கீழணைக்கு, அதன் நீா்ப்பிடிப்பு பகுதி மாவட்டங்களான திருச்சி, கரூா், சேலம், பெரம்பலூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மழை பெய்ததன் காரணமாக நீா்வரத்து அதிகமானது.

Advertisement

Advertisement

இதையடுத்து, கீழணை நிரம்பிய நிலையில், இதிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 2,200 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், ஏரியின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

கீழணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அணையின் மொத்த உயரமான 9 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2,200 கன அடி வீதம் தண்ணீா் வருகிறது. இந்த தண்ணீா் நேரடியாக வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக அனுப்பப்படுகிறது.

வீராணம் ஏரியில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் 983 மில்லியன் கன அடி நீா் தேக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியிலிருந்ந்து சென்னைக்கு குடிநீருக்காக விநாடிக்கு 37.80 கன அடியும், பாசனத்துக்காக விநாடிக்கு 170 கன அடியும் வெளியேற்றப்படுகிறது.

கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வெளியேற்றப்படும் தண்ணீா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments