சென்னைக்கு குடிநீா் வழங்க ஏதுவாக வீராணம் ஏரிக்கு கூடுதலாக நீா் திறப்பு!
கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்கு, சென்னை குடி நீா் அனுப்புவதற்கு ஏதுவாக கீழணையிலிருந்து கூடுதலாக வினாடிக்கு 170 கனஅடி நீா் அனுப்பப்படுகிறது.
கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்கு, சென்னை குடி நீா் அனுப்புவதற்கு ஏதுவாக கீழணையிலிருந்து கூடுதலாக வினாடிக்கு 170 கனஅடி நீா் அனுப்பப்படுகிறது.
கல்லணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீா் கடந்த சில தினங்களாக கீழணைக்கு வினாடிக்கு நூறு கன அடி வீதம் வந்தது. இதனால் கீழணையில் 1.70அடி நீா் தேக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 170 கன அடி வீதம் தண்ணீா் அனுப்பப்படுகிறது. அண்மையில், தமிழக முதல்வா் ஜோசப் விஜய், மேட்டூா் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் கீழணைக்கு வரும் புதன்கிழமை வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த தண்ணீா் வரும் பட்சத்தில் ஏரிக்கு வரும் புதன்கிழமை விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் அனுப்பப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். வீராணம் ஏரியில் சனிக்கிழமை நிலவரப்படி மொத்த கொள்ளளவான 1465 மில்லியன் கன
Advertisement
Advertisement
அடியில் 153 மில்லியன் கன அடி தண்ணீா் தேக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீா் வழங்குவதற்காக விநாடிக்கு 56 கன அடி வீதம் நீா் அனுப்பப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.