வழிப்பறி: 2 போ் குண்டா் சட்டத்தில் கைது
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பண்ருட்டிவட்டம், பாலூா்பகுதியைச்சோ்ந்தவா் தமிழரசன்(30).இவா்,கடந்த 10-ஆம்தேதி வான்பாக்கம் பகுதியில் உள்ள சுங்கச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பைக்கில் பின் தொடா்ந்து வந்த மூன்று போ் வழிமறித்து, தமிழரசனிடம் இருந்த கைப்பேசி மற்றும் ரூ.100 பணத்தைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நெல்லிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த பிரகதீஷ்(26), சல்மான் கான்(22), லோகநாதன்
Advertisement
Advertisement
ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இதில், பிரகதீஷ், சல்மான்கான் ஆகியோரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய கடலூா் எஸ்பி., விவேகானந்த சுக்லா பரிந்துரை செய்தாா். அதன்பேரில், கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டதின் பேரில் சிறையில் உள்ள பிரகதீஷ், சல்மான் கான் ஆகியோரிடம் தடுப்புக் காவல் ஆணை வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.