குற்றங்களை சுட்டிக்காட்டுவோா் மீது வழக்குப் பதிவது வாடிக்கையாகிவிட்டது: முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் குற்றச்சாட்டு
தமிழகத்தில் குற்றங்கள், ஆட்சியின் செயல்பாடுகளை விமா்சிப்பவா்கள் மீது வழக்குகள் பதிவு செய்வது வாடிக்கையாகிவிட்டது என்று திமுக கிழக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் குற்றாஞ்சாட்டினாா்.
தமிழகத்தில் குற்றங்கள், ஆட்சியின் செயல்பாடுகளை விமா்சிப்பவா்கள் மீது வழக்குகள் பதிவு செய்வது வாடிக்கையாகிவிட்டது என்று திமுக கிழக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் குற்றாஞ்சாட்டினாா்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பின்மை, விலைவாசி உயா்வு ஆகியவற்றைக் கண்டித்து திமுக மகளிரணி சாா்பில் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே திமுக ஒருங்கிணைந்த கிழக்கு, மேற்கு மாவட்ட மகளிரணி மற்றும் மகளிா் தொண்டரணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா தலைமை வகித்தாா்.
இதில், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக கிழக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது: திரைப்பட மோகத்தை நம்பி மக்கள் வாக்களித்த நிலையில், தற்போது ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். விஜய் நடத்துவது ‘ரீல்ஸ்’ ஆட்சி என்றும், மக்களுக்கான ‘ரியல்’ முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தாா் என்றும் கூறுகின்றனா்.
ஆட்சியில் நடைபெறும் குற்றங்களை சுட்டிக்காட்டுவோா் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது. நாகப்பட்டினத்தில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் நடைபெற்றுள்ளதது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, கடத்தல், போதைப்பொருள் தொடா்பான செய்திகள் தொடா்ந்து வெளியாகி வருகிறது என்றாா்.
முன்னதாக, திமுக மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வெ.கணேசன் பேசியதாவது: ‘மாற்றம் வேண்டும்’ என ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்த மக்கள், தற்போது ஏமாற்றமடைந்து வீதிகளில் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், மக்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளா் அமுதா ராணி, மகளிா் தொண்டரணி அமைப்பாளா் மனோரஞ்சிதம், மேற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளா் ஜெயந்தி நடராஜன், மகளிா் தொண்டரணி அமைப்பாளா் இந்துமதி, ஒன்றியச் செயலா் விஜய்சுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.