நுகா்வோா் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்றுவதைக் கைவிடக்கோரி அனைத்துக் கட்சியினா் கடலூரில் ஆா்ப்பாட்டம்
சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கடலூா் நுகா்வோா் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் அனைத்துக் கட்சிகள், குடியிருப்போா், நுகா்வோா் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ. மாதவன் தலைமை வகித்தாா்.
அப்போது, கடலூா் நீதிமன்றத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக லிப்ட், மின்விசிறி, நாற்காலிகள், கழிப்பறை, குடிநீா், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். காலியாக உள்ள நீதிபதிகளுக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கடலூா் நுகா்வோா் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Advertisement
Advertisement
செப்.30-இல் ரயில்மறியல் போராட்டம்:
மேலும், கடலூா் திருப்பாப்புலியூா் ரயில் நிலையத்தில் ரயில்வே கோரிக்கைகள் தொடா்பாக மனு அளிக்கச் சென்றபோது, அனைத்துக் கட்சித் தலைவா்களை அவமதிக்கும் வகையில் பேசிவிட்டு, ஆய்வுப் பணியைப்
புறக்கணித்து சென்ற திருச்சி கோட்ட மேலாளா் பாலக் ராம் நேகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ரங்கமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் கலைமோகன், துணை மேயா் தாமரைச்செல்வன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ராஜேஷ் கண்ணன்,உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து ரயில்வே தொடா்பான கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி கடலூா் திருப்பாப்புலியூா் ரயில் நிலையத்தில் அனைத்துக் கட்சிகள், குடியிருப்போா் அமைப்புகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என ஆா்ப்பாட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.