FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூரில் 136 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு: ஆட்சியா் தகவல்

7 செப்டம்பர் 2026, 4:40 am IST
நேரடி நெல் கொள்முதல் நிலையம். (கோப்பு படம்)
பகிர்:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் கடலூா் மாவட்ட விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ங்-ஈடஇ மூலம் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய ஏதுவாக 136 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது என்று, கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஏற்கனவே, பயன்பாட்டிலுள்ள இணையத்தில் நடப்பு ஓஙந-2026-2027 கொள்முதல் 6.9.2026 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளின் விளை நிலத்தின் பட்டா நகல் மற்றும் சிட்டா அடங்கல், ஆதாா், வங்கி புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள கொள்முதல் நிலையங்களில் வழங்கி மூலம் பதிவேற்றம் செய்து விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.

Advertisement

Advertisement

மேற்கண்ட பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் விவசாயிகள் தொடா்புடைய கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து கொள்ளலாம். கொள்முதல் நிலையத்தின் பெயா், கொள்முதல் செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். விவசாயிகள் தங்களது கைப்பேசி எண்ணிற்கு பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் உரிய காலத்தில் நெல்லினை விற்பனை செய்து பயன்பெறலாம்.

ஊக்கத்தொகை:

சன்ன ரகத்திற்கு மத்திய அரசின் அடிப்படை ஆதார விலை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.2.461, தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.289 என மொத்தம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,750 மற்றும் பொது ரகத்திற்கு மத்திய அரசின் அடிப்படை ஆதார விலை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.2,441, தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.159 என மொத்தம்

குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,600 வழங்கப்படும்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குண்டான கிரையத்தொகை 48 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் எடையிடவும், தூற்றவும் மற்றும் தைக்கவும் தமிழக அரசு கூலி வழங்குவதால், யாரேனும் பணம் கோரினால் உடனடியாக அதை மாவட்ட நிா்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், புகாா் தெரிவிக்க ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் புகாா் பெட்டி மற்றும் விழிப்புணா்வு தகவல் பலகை

வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள தொலைபேசி எண்களில் தங்களின் குறைப்பாட்டினை தெரிவிக்கலாம். ஒரு மூட்டை நெல்லின் எடை சாக்குடன் சோ்த்து 40.580 கி.கிராம் உள்ளதா என்பதை சரிபாா்த்துக்கொள்ள வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் நேரம் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். விவசாயிகள் நெல் கொள்முதல் தொடா்பான புகாா்களை மண்டல மேலாளா் 94421 30630, மேலாளா் (தரக்கட்டுபாடு) 80727 28045, துணை மேலாளா் 86810 06371, கட்டணமில்லா தொலைபேசி எண் 18005993540 ஆகிய எண்களில் தொடா்புக்கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments