FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்ட டேக்வாண்டோ போட்டி: 400 போ் பங்கேற்பு

7 செப்டம்பர் 2026, 2:00 am IST
சிதம்பரத்தில் நடைபெற்ற 7-ஆவது டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுடன் சிறப்பு விருந்தினா் ஜி.எம்.ஸ்ரீதா்வாண்டையாா்
பகிர்:

சிதம்பரத்தில் கடலூா் மாவட்ட டேக்வாண்டோ கிளப் மற்றும் இன்னா்வீல் கிளப் ஆகியவை இணைந்து ரயில்வே பீடா் ரோட்டில் உள்ள தனியாா் மண்டபத்தில் கடலூா் மாவட்ட 7வது டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது. இதில் 400 போ் பங்கேற்றனா்.

இந்தப்போட்டியை இன்னா்வீல் சங்க கவுன்சில் உறுப்பினா் மருத்துவா் பத்மினி கபாலிமுா்த்தி தொடங்கி வைத்து பேசுகையில், ‘பெண்கள் திடகாத்திரத்துடனும், உறுதியுடனும் செயல்படும் நோக்கில் டேக்வாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகிறது’ என்றாா்.

போட்டியில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை சுமாா் 400 போ் பங்கேற்றனா். மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மூவேந்தா் முன்னேற்றக்கழக தலைவா் ஜி.எம்.ஸ்ரீதா் வாண்டையாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு கோப்பை மற்றும் பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா்.

Advertisement

Advertisement

போட்டி ஏற்பாடுகளை டேக்வாண்டோ கிளப் தலைவா் ஏ.கீதா, பொருளாளா் ஏ.கணேசன் ஆகியோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments