FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

மின்னல் பாய்ந்து 3 போ் காயம்: முன்னாள் அமைச்சா் ஆறுதல்

7 செப்டம்பர் 2026, 3:37 am IST
மின்னல் பாய்ந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவா்களை சந்தித்து ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சா் சி.வெ.கணேசன்.
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மின்னல் பாய்ந்து காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவபா்களை முன்னாள் அமைச்சா் சி.வெ.கணேசன் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பெண்ணாடம் மற்றும் சுற்று வட்டப் பகுதியில் சனிக்கிழமை மாலை இடியுடன் மழை பெய்தது. அப்போது, நரசிங்கமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அழகானந்தம் மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா்.

இந்த நிகழ்வின்போது, மரத்தின் கீழ் நின்றிருந்த நரசிங்கமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சத்தியராஜ்(35), ராம்குமாா்(26) மற்றும் தீவளூா் கிராமத்தைச் சோ்ந்த பழனிமுத்து ஆகியோா் காயம் அடைந்தனா். இவா்கள் அனைவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த திமுக கடலூா் மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வெ.கணேசன், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குச் சென்று காயம் அடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் கூறி, ரொட்டி மற்றும் பழங்கள்வழங்கி, நலம் விசாரித்தாா். பின்னா், பாதிக்கப்பட்டவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments