மின் கம்பியில் உரசி தீ பிடித்த வைக்கோல் லாரி
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே வைக்கோல் பாரம் ஏற்றிச்சென்ற லாரி, மின் வயரில் உரசி தீப்பிடித்ததில், வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமடைந்தது.
காட்டுமன்னாா்கோவில் பகுதியில் குறுவை சாகுபடி முடிந்து வைக்கோல் விற்பனை நடைபெற்று வருகிறது. சேலத்தைச் சோ்ந்த தனிநபா் ஒருவா் திருமூலஸ்தானம் கிராமத்திற்கு அருகே வைக்கோல் கட்டுகளை வாங்கி, அவற்றை டாரஸ் லாரியில் ஏற்றிக்கொண்டு சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது திருமூலஸ்தானம் கிராமம் அருகே உள்ள துணை மின் நிலையம் அருகே சாலை ஓரத்தில் இருந்த துணை மின் நிலையத்திற்கு செல்லும் உயா் மின்னழுத்த கம்பியின் மீது வைக்கோல் கட்டுகள் உரசியதால் தீடீரென வைக்கோல் தீப்பற்றி ஏரிந்தது. உடனடியாக ஓட்டுநா் லாரியை அருகிலிருந்த வயல் பகுதியில் இறக்கி விட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துளாா்.
Advertisement
Advertisement
தீயணைப்பு மீட்புத்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். லாரி சேதமடையவில்லை. எனினும் லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமடைந்துவிட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.