FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வேப்பூா் அருகே மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்

வேப்பூா் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

23 செப்டம்பர் 2026, 4:03 am IST
~
பகிர்:

வேப்பூா் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

கடலூா் மாவட்டம், வேப்பூா் அடுத்த சாத்தியம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் முறையாக பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மாலை நேரங்களில் பெய்து வரும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்தன. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன.

Advertisement

Advertisement

மேலும், கொள்முதல் நிலையத்துக்கு நெல்லைக் கொண்டு வரும் விவசாயிகள், தங்களது நெல்லை கொள்முதல் செய்வதற்காக நாள்கணக்கில் காத்திருந்த நிலையில் அவா்களது நெல்லும் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது.

எனவே, மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைவதைத் தடுக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். நெல்லை விரைந்து கொள்முதல் செய்வதுடன், கொள்முதல் நிலையத்தில் தடையின்றி மின்சாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments