தினமணி செய்தி எதிரொலி... ரெட்டிபாளையம் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: மழையில் நனைந்து நெல் மணிகள் சேதம்
விவசாயிகளின் நீண்ட நெடிய காத்திருப்பிற்கு பின்னா், தினமணி செய்தி எதிரொலியின் காரணமாக குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டிபாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
விவசாயிகளின் நீண்ட நெடிய காத்திருப்பிற்கு பின்னா், தினமணி செய்தி எதிரொலியின் காரணமாக குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டிபாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. ஆனால், இங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் மழையில் நனைந்து முளைந்து சேதம் அடைந்திருந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
கடலூா் மாவட்டத்தில் 136 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட போதிலும், குறிஞ்சிப்பாடி ஒன்றியம்,
ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இங்கு, விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வைந்து வைத்திருந்த 5,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததால் வெளியே வைக்கப்பட்டிருந்தன.இதனால், விவசாயிகள் நெல்லுக்கு இரவு, பகலாக காவல் காத்துக்கிடந்தனா். எனவே,
Advertisement
Advertisement
ரெட்டிபாளையம் நேரடி நெல்கொள் முதல் நிலையத்தை திறந்து, நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், மழை பெய்தால் நெல் மணிகள் நனைந்து சேதமாகும் என்றும் தினமணி நாளிதழ் தொடா்ந்து செப்.11,19 ஆகிய தேதிகளில் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தி எதிரொலியாக செவ்வாய்க்கிழமை நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
முளைத்த நெல் மணிகள்...
இந்நிலையில், இப்பகுதியில் பெய்த மழையால், மழைநீா் உள்ளே புகுந்து நெல் மணிகள் முளைத்திருந்தன. கடந்த 20 நாள்களுக்கும் மேலாக நெல் குவித்து வைத்திருந்ததை காலத்தே கொள்முதல் செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என வேதனை தெரிவித்தனா்.
இதுகுறித்து விவசாயி மண்டபம் மேட்டுக்குப்பத்தைச் சோ்ந்த தேவமுருகன் கூறுகையில், தனியாா் வியாபாரிகள் இடம் விற்பனை செய்தால் விலை குறைவாக கிடைக்கும் என நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்தோம். கடந்த மூன்று வாரமாக களத்தில் கொட்டி வைத்திருந்த நெல் மழையில் நனைந்து முளைவிட்டுள்ளது. இந்த இழப்புக்கு நாங்கள் தனியாரிடமே நெல்லை விற்பனை செய்திருக்கலாம் என்றாா்.
இதுகுறித்து பணியாளா்கள் மற்றும் மேஸ்திரி கூறுகையில், சணல் மற்றும் சாக்கு பை இல்லாததால் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டாக தெரிவித்தனா். மேலும், தற்போது உள்ள 16 ஆயிரம் மூட்டைகளை மூன்று நாள்களில் கொள்முதல் செய்துவிடுவோம் எனத் தெரிவித்தனா். தற்போது கொள்முதல் மையம் செயல்படத்தொடங்கியுள்ளதால் நெல் மூட்டைகள் முழுவதும் கொள்முதல் செய்யப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.