நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகை பதிவு: இன்று சிறப்பு முகாம்
கடலூா் மாவட்டத்தில் இதுவரை விரல்ரேகைப் பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களுக்காக அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சனிக்கிழமை (செப். 26) சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
கடலூா் மாவட்டத்தில் இதுவரை விரல்ரேகைப் பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களுக்காக அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சனிக்கிழமை (செப். 26) சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூா் மாவட்டத்தில் இதுவரை விரல்ரேகைப் பதிவு மேற்கொள்ளாத முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்கள், அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரா்களின் குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் சனிக்கிழமை (செப். 26) நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
இதன் மூலம், குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட வேண்டிய மின்னணு உங்கள் வாடிக்கையாளரை அறிதல் (கேஒய்சி) பதிவுக்கான விரல்ரேகையை நியாயவிலைக் கடைகளில் பதிவு செய்து உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
விரல்ரேகைப் பதிவு மேற்கொள்ளாத குடும்ப உறுப்பினா்கள் வெளியூா் அல்லது வெளிமாநிலங்களில் வசித்து வந்தாலும், அவா்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகைப் பதிவை மேற்கொள்ளலாம்.
எனவே, இதுவரை விரல்ரேகைப் பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்கள் இந்தச் சிறப்பு முகாமைப் பயன்படுத்தி தங்களது கைரேகையைப் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.