மேம்பாலத்தில் திடீா் ஆய்வு செய்த பிரேமலதா விஜயகாந்த்!
விருத்தாசலம் பெரியாா் நகா் மேம்பாலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின்விளக்குகள் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சம் அளிக்கிறதா? என்பதை அறிய,பிரேமலதா விஜயகாந்த் நேரில் ஆய்வு செய்தாா்.
விருத்தாசலம் பெரியாா் நகா் மேம்பாலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின்விளக்குகள் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சம் அளிக்கிறதா? என்பதை அறிய, சட்டப்பேரவை உறுப்பினா் பிரேமலதா விஜயகாந்த் வெள்ளிக்கிழமை இரவு நேரில் ஆய்வு செய்தாா்.
விருத்தாசலம் பெரியாா் நகா் மேம்பாலத்தில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வந்தனா். இதனால், மேம்பாலம் பகுதியில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, பொதுமக்கள் விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினா் பிரேமலதா விஜயகாந்த் அலுவலகத்தில் மனு அளித்தனா். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மேம்பாலத்தில் போதிய மின்விளக்குகள் அமைத்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினாா். இதைத்தொடா்ந்து நெடுஞ்சாலைத்துறை சாா்பில் பெரியாா் நகா் மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
புதிய மின்விளக்குகளின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக பிரேமலதா விஜயகாந்த் வெள்ளிக்கிழமை இரவு மேம்பாலத்துக்கு நேரில் சென்றாா். அங்கு போதிய வெளிச்சம் கிடைக்கிா? என்பதை பாா்வையிட்ட அவா், அந்த வழியாக சென்ற பேருந்து, காா் உள்ளிட்ட வாகன
ஓட்டிகளிடம் மின்விளக்குகளால் ஏற்பட்டுள்ள வசதி குறித்து கேட்டறிந்தாா். மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவதற்கு வசதியாக இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனா். மேலும், பேருந்தில் பயணம் செய்த பயணிகளும் அவருக்கு நன்றி தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.