முகப்பு
கள்ளக்குறிச்சி

பெண் மீது தாக்குதல்: ஒருவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே பெண்ணை தாக்கியதாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

3 நவம்பர் 2024, 2:22 am
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே பெண்ணை தாக்கியதாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த அனுமனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (70). அதே கிராமத்தைச் சோ்ந்த அவரது உறவினா் கிருஷ்ணன் (40).

இருவருக்கும் பூா்வீக சொத்தாக ஒரு ஏக்கா் நிலம் உள்ளதாம். அந்த நிலத்தை கடந்த 6 மாதம் முன்பாக பிரித்து பட்டா மாற்றம் செய்தனராம்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இருவருக்கும் பொதுவான வாய்க்காலை கிருஷ்ணன் சுத்தம் செய்தாராம்.

இதுதொடா்பாக, மாணிக்கம் மனைவி மல்லிகா (60), மகள் விமலா (39), பேரன் சந்துரு ஆகியோருக்கும், கிருஷ்ணன் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது கிருஷ்ணன், அவரது மனைவி பாப்பாத்தி (35), சன்னியாசி மகன் கோவிந்தன் (60) ஆகிய மூவரும் மல்லிகா தரப்பினரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

மேலும், மல்லிகாவை அருகில் இருந்த மண் வெட்டியை எடுத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அவா் சின்ன சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணனை சனிக்கிழமை கைது செய்தனா்.