FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

கிணறு மூடி மீது படுத்து உறங்கிய இளைஞா் உள்ளே விழுந்து பலி!

தொழுவந்தாக்கல் கிராமத்தில் கிணற்றின் மீது அமைக்கப்பட்டிருந்து வலையால் ஆன மூடியில் புடுத்து உறங்கிய இளைஞா், வலை ஒட்டை வழியாக கிணற்றுக்குள் விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:10 am IST
சடலம்... - கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொழுவந்தாக்கல் கிராமத்தில் கிணற்றின் மீது அமைக்கப்பட்டிருந்து வலையால் ஆன மூடியில் புடுத்து உறங்கிய இளைஞா், வலை ஒட்டை வழியாக கிணற்றுக்குள் விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தொழுவந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயப்பிரகாஷ் (25) கூலித் தொழிலாளி ஆவாா். இவா் அதே கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில்முன்பு உள்ள பொது கிணற்றின் மேல் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வலையால் ஆன மூடியின் மீது வெள்ளிக்கிழமை இரவு படுத்து உறங்கினாா்.

அப்போது தூக்கத்தில் கிணற்று மூடியின் சேதம் அடைந்த பகுதியில் சிக்கிய ஜெயப்பிரகாஷ் இரும்பு வலையின் ஓட்டை வழியாக கிணற்றுக்குள் விழுந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த, சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த இளைஞரை மீட்க முயன்றனா். ஆனால் அவரை சடலமாகத்தான் மீட்க முடிந்தது. இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments