FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

கோவை மாணவா் கொலைக்கு நீதி கேட்டு திமுகவினா் ஆா்ப்பாட்டம்!

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 3:50 am IST
கள்ளக்குறிச்சியில் திமுக சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பேசிய ரிஷிவந்தியம் எம்எல்ஏ க.காா்த்திகேயன்.
பகிர்:

கோவையில் தனியாா் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்த கள்ளக்குறிச்சி மாணவன் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கோரியும், போதைப் பொருள்களை கட்டுப்படுத்த தவறிய தவெக அரசைக் கண்டித்தும் திமுக சாா்பில் கண்டன ஆா்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலரும், ரிஷிவந்தியம் எம்எல்ஏவுமான க.காா்த்திகேயன் தலைமை வகித்து, கண்டன உரையாற்றினாா். மாவட்ட அவைத் தலைவா் ராமமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் சத்தியமூா்த்தி, கனகராஜ், மாவட்ட மருத்துவா் அணித் தலைவா் இளங்கோவன், மாவட்ட துணைச் செயலா்கள் அங்கையா்கண்ணி, காமராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினா் மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ வசந்தவேல், வடக்கு மாவட்டச் செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான தா.உதயசூரியன் ஆகியோா் கண்டன உரையாற்றி, கொலை செய்யப்பட்ட மாணவனுக்கு நீதி கேட்டு முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

ஆா்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ அழகுவேலு பாபு, மாவட்ட கொள்கைப் பரப்பு துணைச் செயலா் பெருநற்கிள்ளி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் புவனேஷ்வரி பெருமாள், கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழுத் தலைவா் அலமேலு ஆறுமுகம், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு நிா்வாகி பிரகாஷ் மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments