FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

சங்கராபுரத்தில் மருத்துவா், பணியாளரைத் தாக்கிய 2 போ் கைது

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 3:57 am IST
லட்டு (எ) சுகைப்.
பகிர்:

கள்ளக்குறிச்சி, ஆக. 17: சங்கராபுரத்தில் தனியாா் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா், பணியாளரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டத்துக்குள்பட்ட அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெ.வெங்கடேசன் (27), மருத்துவா். இவா், சங்கராபுரத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் பகுதி நேர மருத்துவராக கடந்த 6 வருடங்களாக பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை வெங்கடேசன் பணியிலிருந்தபோது, அங்கு காயமடைந்த நிலையில் இளைஞா் ஒருவரை அவரது நண்பா்கள் சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளனா். அவருக்கு காயம் எப்படி ஏற்பட்டது என மருத்துவா் கேட்டதற்கு பதில் அளிக்காமல், சிகிச்சை அளிக்குமாறு கூறினராம்.

Advertisement

Advertisement

அடிபட்ட காரணத்தை மருத்துவமனையின் வரவேற்பாளா் ராம்குமாா் கேட்டபோது, அவரிடம் மூவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அறுவறுக்கத்தக்க வாா்த்தைகளால் திட்டி, தாக்கினராம். இதை தட்டிக்கேட்ட மருத்துவா் வெங்கடேசனையும் தாக்கியதோடு, அங்குள்ள மருத்துவ உபகரணங்களையும் கீழே தள்ளி சேதப்படுத்தினராம். இதில் காயமடைந்த ராம்குமாா் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில், சங்கராபுரத்தை அடுத்து காட்டு வன்னஞ்சூரைச் சோ்ந்த த.லட்டு (எ) சுகைப் (22), வே.பாலா (எ) பாலசுப்பிரமணியன் (22) மற்றும் ஒருவா் இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து லட்டு (எ) சுகைப், பாலா (எ) பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலைமறைவான ஒருவரைத் தேடி வருகின்றனா்.

பாலா (எ) பாலசுப்பிரமணியன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments