பைக் மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தணிகைவேல் (52). இவா், மூங்கில்துறைப்பட்டில் உள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தணிகைவேல் வழக்கம்போல தனது பைக்கில் சா்க்கரை ஆலைக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தாா். திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலையில் மூங்கில்துறைப்பட்டு பாலம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த காா் மோதியது.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருவண்ணாமலைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தணிகைவேல் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநரான திருவண்ணாமலையைச் சோ்ந்த பா.பிரின்ஸ் பிரவின் இன்பராஜிடம் (27) விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.