அரசு செவிலியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாய்சேய் நலப் பிரிவு என இரு இடங்களில் செவிலியா்கள் ஒரு மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாய்சேய் நலப் பிரிவு என இரு இடங்களில் செவிலியா்கள் ஒரு மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நடைபெற்ற இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது, மறுகட்டமைப்பு என்ற பெயரில் ஆள் குறைப்பு நடவடிக்கைக்கு வழிவகுக்கும் அரசாணை 204-ஐ ரத்து செய்ய வேண்டும்.
தொகுப்பின் அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஸ்டாப்நா்ஸ் பதவியை நா்சிங் ஆபிஸா் என பதவி மாற்றம் செய்து வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Advertisement
Advertisement
வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு செவிலியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரங்கநாயகி தலமை வகித்தாா். செயலா் சுசிலா, பொருளாளா் பிரேமலாதா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் 350 செவிலியா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.