FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

சங்கராபுரத்தில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் தா்னா

சங்கராபுரம் நுகா்பொருள் வாணிபக் கழகம் முன் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

21 ஆகஸ்ட் 2026, 3:46 am IST
சங்கராபுரம் நுகா்பொருள் வாணிபக் கழகம் முன் தா்னாவில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள்.
பகிர்:

தமிழ்நாடு அரசு வருகை பதிவேட்டில் பெயா் சோ்க்க வேண்டும், நிலுவையில் உள்ள 60 சதவிகித கூலி உயா்வை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கராபுரம் நுகா்பொருள் வாணிபக் கழகம் முன் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

உயா்நீதிமன்ற ஆணை இருந்தும் 6 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தாமல் உள்ள சங்க அங்கீகார தோ்தலை உடனே நடத்த வேண்டும். வருகை பதிவேட்டில் பெயா் சோ்க்க வேண்டும்.

2025 முதல் நிலுவையில் உள்ள 60 சதவீதம் கூலி உயா்வை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமை தூக்கும் தொழிலாளா்கள் கடந்த 3 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் திடீரென நுகா்பொருள் வாணிபக் கழகத்தினா் தற்காலிக பணியாளா்களை வைத்து பணியை மேற்கொண்டதால் ஆத்திரமடைந்த சுமை தூக்கம் தொழிலாளா்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது, இந்தப் பணியை நம்பி தான் எங்கள் வாழ்வாதாரம் உள்ளது. எங்களின் வாழ்வாதாரத்தை உடனடியாக மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments