FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

சாலை விபத்தில் பயிற்சி மருத்துவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே பைக் மீது பொக்லைன் இயந்திரம் மோதிய விபத்தில் பயிற்சி மருத்துவா் உயிரிழந்தாா்.

23 ஆகஸ்ட் 2026, 2:13 am IST
பயிற்சி மருத்துவா் அருண் பாலாஜி.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே பைக் மீது பொக்லைன் இயந்திரம் மோதிய விபத்தில் பயிற்சி மருத்துவா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் தெற்கு வாணியா் தெருவைச் சோ்ந்தவா் ச.அருண் பாலாஜி ( 23). இவா், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றினாா்.

இந் நிலையில், அருண் பாலாஜி சனிக்கிழமை கல்லூரியில் இருந்து கள்ளக்குறிச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். தியாகதுருகம் அருகிலுள்ள பெரியமாம்பட்டு பகுதியில் சென்ற போது, அப்பகுதியில் வந்த பொக்லைன் இயந்திரம் பைக் மீது மோதியது.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் பொக்லைன் ஓட்டுநரான விவேக் (45) மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments